பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை

அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பும் கலந்துரையாடல் ஒன்றும் இன்று 3 .30 மணியளவில் சுழிபுரம் பண்ணாகம் அம்பாள் கலைமன்றத்தில் இடம்பெற்றது


சி.கிரிகுமார் தலைமையில் நடை பெற்றது. இவ் மக்கள் சந்திப்பில்  புவிதரன் சட்டத்தரணி, காண்டீபன் சட்டத்தரணி, சி.ஆ .யோதிலிங்கம் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளரும்  நிலாந்தன் அரசியல் ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் இன்னும் பல விரிவுரையாளர்கள் சட்டத்தரணிகள் கலந்துகொண்டு ஒரு அரசியல்  தெளிவினை மக்களுக்கு ஏற்படுத்தியதுடன் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் கருத்துக்களையும் கேட்டுத்தெரிந்துகொண்டனர் இவர்களுடன் யாழ் சிவில் சமூகமும் கலந்துகொண்டது.