பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2014

விமான நிலையத்தில் திணறிய பிரபல நடிகை

சென்னை விமான நிலையத்திற்கு நடிகை நயன்தாரா தாமதமாக சென்றதால், அவருடைய 5 சூட்கேஸ்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
நடிகை நயன்தாராவின் சொந்த ஊர் கேரள மாநிலத்திலுள்ளது. கிறிஸ்தவரான நயன்தாரா, கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார்.
இதையொட்டி நேற்று காலை 10.30 மணி விமானத்தில் ஏற அவர் சென்னை விமான நிலையம் சென்றபோது, தன்னுடன் 5 சூட்கேஸ்களையும் எடுத்து சென்றுள்ளார்.
ஆனால் சூட்கேஸ்களை ஏற்ற நேரமில்லாத காரணத்தால், அவற்றை விமானத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று விமான ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
அவர்களிடம் நயன்தாரா சமாதானம் கூறியும் சூட்கேஸ்களை ஏற்ற அவர்கள் மறுத்து விட்டனர். இதனிடையே நயன்தாரா கொண்டுவந்த கைப்பையை மட்டும் விமானத்தில் கொண்டு செல்ல ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
வேறு வழியில்லாமல் கைப்பையுடன் கொச்சி கிளம்பியுள்ளார்.