பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2014

மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது - நுகேகொடயில் 7 பெண்கள் கைத
மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேஷியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி வளைப்புக்களிலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதானவர்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவதாக ஜொகூர் பொலிஸ் தலைமை அதிகாரி முகமது மொக்தார் முகம்மட் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
இதன்படி கைதானவர்களில் 102 உள்நாட்டவர்கள், 627 சீனர்கள், வியட்னாமைச் சேர்ந்தவர்கள்- 1,341, தாய்லாந்து- 555, இந்தோனேஷியா- 229, காம்போடியா- 13, பிலிப்பைன்ஸ்-62, மியன்மார்- 16, சிங்கப்பூர்- 1, லாவோஸ்- 4, இலங்கை- 6, இந்தியா- 29 மற்றும் வெனிசுவெல-1  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக தெரியவந்துள்ளது.