பக்கங்கள்

பக்கங்கள்

19 டிச., 2014

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து 8 சிறுவர்களது சடலங்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் வட குயீன்ஸ்லான்ட் மாநிலத்தில் கெயிர்ன்ஸ் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து 18 மாதம் முதல் 15 வயது
வரையான வயதுடைய 8 சிறுவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
அதேசமயம் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அங்கு காணப்பட்ட பெண்ணொருவர் (34வயது)  சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இறந்த சிறுவர்கள் அனைவரும் சகோதரர்கள் எனவும் படுகாயமடைந்த பெண் அவர்களது தாயார் எனவும் அந்தப் பெண்ணின் மைத்துனியான லிஸா தாய்டே தெரிவித்தார். படுகொலைகள் இடம்பெற்ற போது வெளியில் சென்றிருந்த இறந்த சிறுவர்களது மூத்த சகோதரரான 20வயது இளைஞன்  வீடு திரும்பிய போது தனது சகோதரர்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதையும் தாயார் படுகாயமடைந்த நிலையில் காயம் அடைந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்து அயலவர்களுக்கு தெரிவிக்கவும் பொலிஸார் சம்பவ இடத்தை வந்தடைந்தனர். 
தொடர்ந்து அந்த வீடு அமைந்திருந்த ஜூலை முர்ரே வீதி மூடப்பட்டது. 
மேற்படி படுகொலைகளால் அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.