பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

வடக்கு - கிழக்கு நிலைவரம் ஆய்வு செய்கிறது அமெரிக்கா


ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு - கிழக்குகள நிலைவரங்களை அறிந்து கொள்ளும்
முயற்சிகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைகக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அதிகாரி சந்தீப் குரொஸ் முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகளைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

அத்துடன். கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுத பாணியை அமெரிக்க தூதரக அரசியல் விவகார அதிகாரி சந்தீப் குரொஸ் கடந்த 22ஆம் திகதி சந் தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலையிலும் பல அரசியல்வாதிகளைச் சந்தித்த அவர், முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை மாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து கலந்துரையா டியுள்ளார்.

அதேவேளை, புதுக்குடியிருப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இணைப்பாளர் கனகரத்தினத்தையும் சந்தீப் குரொஸ் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்புகளின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அவர்களின் நிலைப்பாடு, ஆளும் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளுடனான கூட்டமைப்பின் உறவுகள் மற்றும் சீனாவுடனான உறவுகள் தொடர்பில்  சந்தீப் குரொஸ் விசாரித்து அறிந்து கொண்டுள்ளார்.

கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு  மத்தியில் அமெரிக்கத் தூதரக அரசியல் விவகார அதிகாரி இந்தப் பயணங்களை மேற்கொண்டு சந்திப்புக்களை நடத் தியுள்ளார்.

இந்தச் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதரக பேச்சாளர் நிகோல் சுலிக், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுடனும் அமெரிக்கத் தூதரகம் இத்தகைய சந்திப்புகளை நடத்துவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.