பக்கங்கள்

பக்கங்கள்

28 டிச., 2014

8 மீனவர்கள், இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற 4 மீனவர்கள் சென்ற படகு, கச்சத்தீவு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்றது. 4 மீனவர்கள் இருந்த அந்த படகை மீட்பதற்காக மற்றொரு படகில் 4 மீனவர்கள் சென்றனர். பழுதாகி நின்ற படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 மீனவர்களையும் கைது செய்தனர். இரண்டு படகுகளையும் சிறை பிடித்தனர்.