பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2014

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு?: மலையக மக்கள் முன்னணிக்குள் மோதல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் மலையக மக்கள் முன்னணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டம் முடிவின்றி  நிறைவு பெற்றுள்ளது.
தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வி.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவியும் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் மனைவியுமான சாந்தினி சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் நேற்று  நடைபெற்ற கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின்  தோட்ட தொழிற்சங்க தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், அமைப்பாளர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.