பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

முதலீட்டாளர்களை ஈர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார். 


மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் இன்று அவர் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார். குறிப்பாக, வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க ரூ.1371.86 கோடி நிதியுதவியும் அனுமதியும் மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதேபோல், காவிரி, வைகை மற்றும் குண்டாறு ஆகிய தமிழக நதிகளை இணைக்கும் திட்டமானது மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.