பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

எதிரணிக்கு தாவ போகும் ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி
காலி மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தாவ உள்ளதாக தெரியவருகிறது.
காலி மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான அரசியல் குடும்பத்தின் உறுப்பினரான இவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக அரசாங்கம் இவருக்கு முக்கியமான பங்கு எதனையும் வழங்கவில்லை என தெரியவருகிறது.
எனினும் இந்த கட்சி தாவல் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என பொது எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவித்தன