பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2014

சச்சினைத் தகர்க்க காத்திருக்கும் சங்கா
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார்.

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்கார, அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி, பல சாதனைகளையும் குவித்து வரு கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்கார, அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்ப வான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.

452 இன்னிங்களில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதங்கள் அடித்துள்ளார்.
ஆனால் 386 இன்னிங்களில் விளையாடியுள்ள சங்கக்கார இபபொழுதே 89 அரைச் சதத்தை கடந்துவிட்டார்.

சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னும் 8 அரைச்சதங்கள் மட்டுமே உள்ளது.
உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன் இலங்கை குறைந்தது 15 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் சச்சின் சாதனை சங்கக்காராவால் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.

சங்கக்காரவுக்கு அடுத்ததாக அதிக அரைச்சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் கலிஸ் (86), டிராவிட் (83), இன்சமாம் (83), பொன்ரிங் (82), ஜெயவர்த்தன (76), கங்குலி (72), ஜெயசூரிய (68), மொஹமட் யூசுப் (64) ஆகியோர் அடுத்தடுத்த இடங் களில் இருக்கின்றனர்.