பக்கங்கள்

பக்கங்கள்

27 டிச., 2014

தேனியில் வன்முறை: காவல்துறை துப்பாக்கிச்சூடு - கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு



தேனியில் வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியது.  வன்முறையில் ஈடுபடுவோரை தடுக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.  

தேனி அல்லி நகரத்தில் பார்வர்டு பிளாக் பிரமுகர் எஸ்.ஆர். தமிழன் இறுதி ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் எழுந்தது.   போலீசார் தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

 இந்த மோதல் மீண்டும் தொடர்கிறது.  அப்பகுதியில் கட்டுக்கடங்காத  வன்முறை நிகழ்கிறது.  வன்முறையில் ஈடுபட்டோர் பெரியகுளம் சாலையில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினர்.   இரு தரப்பினரும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போலீசார் தடியடி நடத்தி வருகின்றனர்.   

பெரியகுளம் சாலையில் வன்முறையை தடுக்க முயன்ற  காவல்துறையினர் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.  இருவர் கல்வீச்சில் காயமடைந்தனர்.