பக்கங்கள்

பக்கங்கள்

18 டிச., 2014

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரும் மைத்திரிக்கு ஆதரவு?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான விதுர விக்கிரமநாயக்கவும் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அவர்கள் இருவரையும் எதிரணியில் இணையாது, தொடர்ந்து அரசாங்கத்திலேயே தக்கவைத்துக் கொள்வதற்கு அரச தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது இல்லத்திற்கு வெளியில் அரச புலனாய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது குறித்த இருவரும் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான விதுர விக்கிரமநாயக்கவும் பொது எதிரணியுடன் நாளை இரவு இணைந்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலவைர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடம் குறித்த இருவரும் நேற்று பேச்சு நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது