பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2014

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டி கொல்கத்தா- கோவா ஆட்டம் சமநிலை
கொல்கத்தா-கோவா அணி களுக்கிடையிலான ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

இந்தியன் சுப்பர் லீக் காற் பந்து (ஐ.எஸ்.எல்.) போட் டியில் அட்லெடிகோ டீ கொல்கத்தா-எப்.சி.கோவா அணிகள் இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று கொல்கத்தாவில் நேற்று முன்தி னம் நடந்தது.

காயத்தால் கொல்கத்தா அணியில் நட்சத்திர வீரர் பிக்ரு ஆடவில்லை. இருப்பினும் சொந்த ஊர் சாதகமான சூழலை கொல்கத்தா அணி பயன்படுத்த தவறியது.

கோவாவின் தடுப்பு அரண் கொஞ்சம் பலவீனமானது என்றாலும் கடைசி வரை முட்டுக் கட்டையை கொல்கத்தா அணியினரால் உடைக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) சமநிலையானது.

இவ்விரு அணிகள் இடை யிலான அரைஇறுதியின் 2 ஆவது சுற்று எதிர்வரும் 17 ஆம் திகதி கோவாவில் நடக்கிறது.

இதன் முடிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணி எது என்பது தெரியவரும்.