பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2014

ஆட்சிக்கு அவரும் கட்சியோடு கூட்டு சேரும் குரங்கு மனம் கொண்ட ஹக்கீம் இறுதியில் மைத்திரியை தெரிவு செய்தார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இறுதியில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவது எ
ன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரளிப்பது என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸில் இரு வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்தது.
இந்த நெருக்கடி காரணமாக இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனடிப்படையில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரண்டு தரப்பினரின் பெரும்பான்மையானவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை தெரிவு செய்ய ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.
இதனடிப்படையில் இம்முறை தேர்தலில் ராஜபக்ஷவினருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு தலைவணங்கி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பொது எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன