பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

அந்நிய இராணுவ பிரசன்னங்களை தவிர்க்க வேண்டும்!- அஜித் டோவால்
இந்து சமுத்திரத்தை அண்டிய பிராந்தியங்கள் பல்லின சமூகங்களை கொண்ட நாடுகளாக அமைந்துள்ளன. எனவே இங்கு அமைதியான தன்மை நிலைபெற வேண்டும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தெரிவித்துள்ளார்.
காலி கலந்துரையாடல் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இதன்பொருட்டு இலங்கை வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து அவர் வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
வெளிநாட்டவரின் அநாவசிய இராணுவ பிரசன்னங்கள் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் குறிப்பிட்டார்.
1971ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் யோசனைப்படி, இந்து சமுத்திர பிரதேசம் ஒரு சமாதான பிரதேசமாகும்.
எனவே இந்தப் பிராந்தியத்தில் அந்நிய இராணுவ பிரசன்னங்ளுக்கு இடமளிக்கக்கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்தியா, சுமார் 5000 ஆயிரம் வருடங்களாக பிராந்தியத்தில் பலமிக்க நாடாக இருந்து வருகிறது. எனினும் எந்த நாட்டுக்கு எதிராகவும் அது ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் டோவால் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கடற்கொள்ளையர், போதைவஸ்து கட்டுப்பாடு மனித கடத்தல்கள் என்பவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையுடனும், மாலைதீவுடனும் சிறந்த ஒத்துழைப்பை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்துள்ள இந்த கலந்துரையாடலில், 36 நாடுகளை சேர்ந்த 100 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.