பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2014

யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் வாழுகின்ற சில முகாம்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து அந்த மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப் பகுதிகளில் உள்ள பொது நோக்கு மண்டபங்கள் பாடசாலைகள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் உள்ள 18 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சேந்தாங்களம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். 
அதனை அண்மித்துள்ள வலித்தூண்டல் பகுதி மக்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள ஜே 219 அளவெட்டி தெற்கு முகாமில் உள்ள 17 குடும்பங்கள் நேற்று முன்தினம் அங்கிருந்து இடம்பெயர்ந்து அளவெட்டி தெற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலையில் தஞ்சம் புகுந்தன.
தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக அந்தப்படசாலையிலிருந்தும் இடம்பெயர்ந்து அளவெட்டி அருணாசலம் வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.
வலி.வடக்கின் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள கோணப்புலம்,சபாபதிபிள்ளை, கண்கணி முகாம்களில் முற்று முழுதாக மழைவெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது.இதனால் 460வது குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.
மேலும் காரைநகர் களபூமி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் நீரில் மூழ்கியுள்ளது.  இதனால் 250 மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளது. 
நேற்றைய தினம் வரை அருகிலுள்ள தேவாலயம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் அந்த பகுதியும் வெள்ளத்தில் முழ்கியதன் காரணமாக அருகிலுள்ள சுந்தரமூர்த்தி ஆரம்ப பாடசாலையில் தங்கியுள்ளனர். 
இதேவேளை காக்கை தீவு, பொம்மைவெளி, வசந்தபுரம், நித்தியவெளி,போன்ற தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சில பிரதேசங்களூடான வீதிகளை குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்து வருவதால போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது