பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2014

புலிகளால் ஆபத்து மகிந்த பரப்புரை
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்து உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாணந்துறையில் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறி ப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், வெளி நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களால் நாட்டுக்கு இன்னமும் ஆபத்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமக்கென சொந்தமாக ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்கி, நாட்டின் நலன்களுக்கு எதிராகப்பணி யாற்றுகின்றனர்.

வெளிநாடுகளில் இயங்கும் இத்தகைய குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பிலும், அவர்களுக்கு ஆதரவாக உள்நாட்டில் செயற்படுவோர் குறித்தும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்து வதற்கு அரசாங்கமும், மக்களும் தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும்.

விடுதலைப் புலிகளுடனான போரில் பெறப்பட்ட வெற்றியை நிலைப்படுத்திக் கொள்வதற்கு, வெற்றிலைச் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் தனதுரையில் மேலும் தெரிவித்து
ள்ளார்.