பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2014

தடையையும் தாண்டி மக்கள் வெள்ளம்
பொலநறுவையில் நேற்று நடைபெற்ற மைத்திரிபால சிறி சேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சி களும் தோல்வியில் முடிவடைந் துள்ளது.

முன்னதாக இந்தக் கூட்டத்தை நடத்து மிடத்தில் பிக்குமார்களுக்காக ஏற்பாடு செய் யப்பட்டிருந்த விசேட கூடாரத்தை நேற்று முன்தினம் மாலை பாதுகாப்பு படையினரை பயன்படுத்தி அரசாங்கம் கழற்றி வைத்திருந் தது.

நேற்று அதிகாலை முதல் பராக்கிரமபாகு குளத்தில் மேலதிக நீரை வெளியேற்றும் வான்கதவுகள் திறக்கப்படவுள்ளதாக பொல நறுவை பூராகவும் ஒரு வதந்தி பரப்பப்பட்டி ருந்தது.

அவ்வாறு நீர் திறந்து விடப்பட்டால் மைத்திரிபாலவின் கூட்டத்துக்கு வருகை தரும் மக்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கை செய் யப்பட்டிருந்தது.

எனினும் இதையெல்லாம் மீறி பொது மக் கள் பெருமளவில் பொதுக்கூட்டத்தில் திரண் டுள்ளதுடன், கரு ஜயசூரிய உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் முக்கிய தலைவர்
களும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.