பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2014

மைத்திரிக்கும் தமிழ் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை!- ஜனாதிபதி மஹிந்த
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் உட்பட்டோர் வடிவமைத்ததாக ஜனாதிபதி கூறினார்.
இதனை தாம் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அவர், விரைவில் அது தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மறக்க முடியாது என்றும் ராஜபக்ச கூறினார்.
வெளிநாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தம்மை ஹேக் நகருக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.
எனினும் இலங்கை மக்கள் தம்மை ஹேக் நகருக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.