பக்கங்கள்

பக்கங்கள்

29 டிச., 2014

எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்! சோலங்காராச்சியின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை


எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என கொடிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தற்போது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
நான் தற்போது ஓர் கர்ப்பிணியாவேன் என அவர் கண்ணீர் மல்க செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சோலங்காரச்சி, பிரதேச சபையின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
கொலன்னா பிரதேசத்தில் டிபென்டர் ரக வாகனங்கள் சஞ்சரிப்பதாகவும், தம்மை பின்தொடர்வதாகவும் சோலங்காராச்சி அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக ஏற்கனவே சோலங்காராச்சி முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.