பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2014

அமைச்சர் றிசார்ட் அசாத் சாலியுடன் இரகசிய பேச்சு
அமைச்சர் றிசார்ட் பதியூதீன் எதிர்க்கட்சிகளின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான அசாத் சாலியுடன் இரகசியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதியூதீன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், எந்த காரணத்தின் அடிப்படையில், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோரும் நேற்றைய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.