பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2014

இலங்கை அதிபர் பொது வேட்பாளர் மீது ஆனந்தி குற்றச்சாட்டு!
இலங்கை பொது அதிபர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும்
, எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த முடியாது என்றும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதற்குப் பதிலாக உள்நாட்டில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்றும் தனது தேர்தல் பிரசாரத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்திருந்தார்.

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் அளித்த பேட்டியில், எல்.எல்.ஆர்.சி. ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற உள்ளூர் பொறிமுறையிலான விசாரணைகள் என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை நாங்கள் நாடியிருக்கின்றோம்.

இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.