பக்கங்கள்

பக்கங்கள்

2 டிச., 2014

news















பொகவந்தலாவையில் மண்சரிவு ; தாயும் மகளும் சாவு 
 பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்ட வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் வீட்டினுள் உறக்கத்தில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

 
இதில் தாய் எஸ்.விஜயகுமாரி (வயது -45), எஸ்.துஷாரா (வயது -19) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.இப்பிரதேசத்தில் பெய்து வரும் மழை காரணமாக நேற்றிரவு 12 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் பொகவந்தலாவ பிரதேசத்தில் குறிப்பிட்ட 
 
இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.