பக்கங்கள்

பக்கங்கள்

31 டிச., 2014

இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்

அமெரிக்காவில் இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். 

வடக்கு இடாஹோ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய வெரோனிகா என்ற பெண், ஹேடன் நகரில் உள்ள வணிக வளாகத்திற்கு, தனது இரண்டு வயது மகனுடன் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அந்த குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. இதில் துப்பாக்கியின் விசையை குழந்தை அழுத்திவிட, எதிர்பாரத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, தாயின் உடலில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வெரோனிகா உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தையடுதது நாள் முழுவதும் அந்த வணிக வளாகம் மூடப்பட்டது. வெரோனிகா வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கியாகும்.