பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2014

மைத்திரிபாலவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள - ராஜித நியமனம்
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக மங்கள சமரவீரவும்,  ராஜித சேனாரட்னவும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பேச்சாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மங்கள சமரவீர மற்றும் மற்றும் ராஜித சேனாட்ரன ஆகியோர் கடமையாற்ற உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியினால் இந்த நியமனம் குறித்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் குறித்த மைத்திரிபாலவின் உத்தியோகபூர்வ கருத்துக்களை வெளியிடுதல்,  பிரச்சாரத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இருவரும் மேற்கொள்ள உள்ளனர்.
இதேவேளை, ராஜித சேனாரட்ன மற்றும் மங்கள சமரவீர ஆகிய இருவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடக் கூடியவர்கள் எனவும், இதனால் இவர்களது நியமனம் எந்தளவிற்கு பொருத்தமானதாக அமையும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்