பக்கங்கள்

பக்கங்கள்

17 டிச., 2014

பாகிஸ்தான் ராணுவ பள்ளிக்குள் நடந்த தாக்குதலில் எடுக்கப்பட்ட கோர காட்சியின் படங்கள்!
 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவ பள்ளிக்குள் தாலிபான் தீவிரவாதிகள் நடந்த கோர காட்சியின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளியில் தாலிபான்கள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள், 9 பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் உயிரிழந்தனர்.
தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த 141 பேர் பலியானார்கள்.
 
இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த சண்டை படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தீவிரவாதிகள் பள்ளி தலைமையாசிரியர் தகிரா ஹசியை தீவைத்து எரித்த அறையும், மாணவர்களை சரமாரியாக சுட்டுக்கொலை செய்த ஆடிட்டோரியத்தின் படமும் வெளியாகியுள்ளது.
 
இதில் கொடுமை, தீவிரவாதிகள் வகுப்பறையில் தலைமை ஆசிரியர் தகிரா ஹசியை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடூரச் செயலை குழந்தைகளை பார்க்கும்படி செய்துள்ளனர். இவரது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இவர்தான் இந்த பள்ளியின் பொறுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.