சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு, அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான் என்றும், காங்கிரஸ் அதற்கு எதிரான கட்சி தான் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதனால், குஷ்புவிற்கு எதிராக தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் களம் இறங்கியுள்ளனர்.
நடிகை குஷ்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறியதை கண்டிக்கும் விதமாக நாளை வியாழக்கிழமையன்று காலை 10.00 மணிக்கு பட்டிணபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லீத் கேஸ்டல் சாலையில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை தமிழர் முன்னேற்றப் படையினர் அதன் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையில் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |