பக்கங்கள்

பக்கங்கள்

26 டிச., 2014

மலையகத்தில் கடும் மழை : போக்குவரத்து பாதிப்பு


ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியிலும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதனால்  வாகன சாரதிகளை
மிகுந்த அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 4 திறக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரிசிரி தெரிவித்துள்ளார். மலையகத்தில் ஏனைய நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.