பக்கங்கள்

பக்கங்கள்

30 டிச., 2014

தந்தியின் விபச்சாரம்

ராஜபக்சேவை பேட்டி எடுக்க சென்றிருந்த தந்தி டிவி செய்தியாளர் ஹரிஹரனும், அவருடன் சென்றவர்களும், ராஜபக்சேவின் இல்லத்தை புகைப்படம் எடுத்தார்கள்
என்பதற்காக, அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சிறைபடுத்தப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்சேவின் தமிழக நண்பர்களான, சுப்ரமணியசாமி, துக்ளக் சோ போன்றவர்கள் ராஜபக்சேவிடம் பேசியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்போது ராஜபக்சே பற்றி எந்த எதிர்மறையான கருத்துக்களையும் பரப்பக்கூடாது என்கிற ஒப்பந்தத்தின் அடிப்படையிலே இந்த நேர்காணல் நடந்திருக்கிறது. தொலைகாட்சி வரலாற்றில் புதிய புரட்சி என்று வாய்கிழிய கூவும் தந்தி டிவி, தங்கள் செய்தியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை மறைப்பதேன்? இலங்கையில் ராஜபக்சேவிற்கு எதிராக எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களே மிரட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக நடந்திருக்கின்றன. ஏராளமான பத்திரிக்கையாளர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கருத்துரிமையின் குரல்வளையை நெரித்து சர்வதேச சமூகத்தின் முன்பாக தன்னை யோக்கியவானாக காட்டிக் கொண்டு திரியும் ராஜபக்சேவை, இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை, ஜனநாயகவாதியாகவும், கருத்துரிமை காவலராகவும், சித்தரிக்க முற்படும் தந்தி டிவியை வன்மையாக கண்டிக்கிறேன். இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தமிழர்களிடம் ராஜபக்சேவை நியாயவானாக சித்தரிக்கும் விதமாக செயல்படும் தந்தி டிவியை வன்மையாக கண்டிப்போம்....
- மடிப்பாக்கம் வெற்றிசெல்வன்