பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2014

பேப்பரை வீசியதால் பரபரப்பு: இதுதான் சபாநாயகர் பதவிக்கு அளிக்கும் மரியாதையா என தம்பிதுரை கண்டனம்
மதமாற்றம் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மக்களவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்பி பப்பு யாதவ், துணை சபாநாயகர் தம்பிதுரை மீது பேப்பரை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் அவையை சிறிது நேரம் ஒத்திவைத்த தம்பிதுரை, இதற்கு கண்டனம் தெரிவித்தார். என் மீது பேப்பர் வீசியது சரியான அணுகுமுறையா. நீங்கள் தான் அதை செய்தீர்கள். இது மிகவும் தீய செயல். மிகவும் கண்டிக்கத்தக்க செயல். இதுதான் சபாநாயகர் பதவிக்கு நீங்கள் அளிக்கும் மரியாதையா என்றார்.

இதுதொடரபாக நாடாளுமன்ற வளாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பப்பு யாதவ், துணை சபாநாயகர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். துணை சபாநாயகர் மீது பேப்பர் வீசவில்லை என்று கூறினார்.