பக்கங்கள்

பக்கங்கள்

1 டிச., 2014

நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை
பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரின் கணவரும் நடிகருமான ரித்திஷ் தேஷ்முக் கூறி உள்ளார்.

இது தொடர்பாக ரித்திஷ் தேஷ்முக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக  மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். இருவருக்கும் டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ரித்திஷ் தேஷ்முக் ஹிந்தி திரைப்பட உலகின் பிரபல நடிகர் தயாரிப்பாளர். இவருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்த ஜெனிலியாவுக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.