பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2014

டக்ளஸ் - சிறிதரன் வாக்குவாதம் வெளியேறினார் முதலமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது.

குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

காணாமல் போனோர் தொடர்பிலேயே இந்த வாக்குவாதம் இடம் பெற்றது.

இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினா
ர்