பக்கங்கள்

பக்கங்கள்

6 டிச., 2014

போர்க்குற்றம் சுமத்தப்படுமானால் மின்சாரக் கதிரைக்கு செல்லத் தயார்!- சரத் பொன்சேகா
போரில் வெற்றி பெற்றமைக்கு காரணமாக இருந்தது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையல்ல என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் காரணமாகவே போரில் வெற்றிபெற முடிந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சரத் பொன்சேகா,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பவரால் நாட்டின் நிர்வாகங்களை முன்னெடுத்து செல்லமுடியும்.
இதனைவிடுத்துää போரில் வியூகங்களை வகுப்பது நிறைவேற்று ஜனாதிபதி அல்ல என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
எனவே இலங்கையின் இராணுவத்தினர் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படுமானால் அது தொடர்பில் மின்சாரக் கதிரைக்கு செல்ல தாம் தயார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.