பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2014

திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய இளைஞன் ஏறாவூரில் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் யுவதி ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி அந்தரங்க உறுப்பை காட்டியதாக கூறப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதான யுவதியிடமே மேற்படி இளைஞன் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார்.
குறித்த யுவதி ஏறாவூர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, நேற்று அந்த இளைஞனைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர் செய்யவிருப்பதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.