பக்கங்கள்

பக்கங்கள்

25 டிச., 2014

தற்போதைய செய்தி 
சொமாலியாவின் தலைநகர் மொகதிஷூவில் இருக்கும் ஆப்ரிக்க ஒன்றிய அமைதிப்படயின் தலைமை ராணுவதளத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.
விமானநிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ராணுவ வளாகத்திலிருந்து துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும்ம், குண்டுவெடிப்பு
சத்தங்களும் கேட்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ராணுவதளத்திற்குள் தமது படையினர் ஊடுறுவிச் சென்று தாக்குதல் நடத்திவருவதாகவும் அங்கே சண்டை தொடருவதாகவும் அல் ஷபாப் திவிரவாதக்குழுவின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்திருக்கிறார்.
இங்கே தாக்குதல் தொடருவதாக ஆப்ரிக்க ஒன்றியத்தின் பேசாளர் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த விவரங்கள் இன்னமும் கிடைக்கவில்லை.