பக்கங்கள்

பக்கங்கள்

7 டிச., 2014

பூநகரி பிரதேசசபை உறுப்பினர்களை மாற்றம் செய்து அரசிடம் ஒப்படைக்க சதி செய்கிறார் ஆனந்தசங்கரி 
பூநகரி பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு தகுதி இல்லை என்று தான் நினைத்தவர்களை நீக்குவதற்கு உதவித்தேர்தல் ஆணையாளருக்கு
அறிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
பூநகரி பிரதேச சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 6 பேரையும் கட்சித்தலைமை நீக்கியுள்ளமை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் வேட்பு மனுவில் இடம்பெற்ற பிரச்சனைகள் காரணமாக உடனடியாக தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டியிருந்தது.கடந்த மூன்று வருடங்களாக சபை இயங்கிவந்தது. ஆனால் சில உறுப்பினர்களின் மேல் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் சபையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காததன் காரணமாகவும் தவிசாளர் உள்ளிட்ட ஆளும்கட்சியின் 6 உறுப்பினர்களை இடைநிறுத்தியுள்ளோம். சில உறுப்பினர்கள் தாமாகவே இடைவிலகுவதாக எமக்கு அறிவித்துள்ளார்களெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு இப் பிரதேச சபை உறுப்பினர் பகிர்வில் வழங்கப்பட்ட உறுதி மொழியைக் கூட ஆனந்த சங்கரி பின்பற்ற வில்லை எனவும் விசனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன் நிலையில் இப் பிரதேச சபையை அரசாங்கத்திற்கு பல மில்லியன்களுக்கு விற்பதற்கான முயற்சியில் ஆனந்த சங்கரி இறங்கியுள்ளதை வினவிய போதே உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப் பட்டதாக நீக்கப்பட்ட தவிசாளர் தெரிவித்தார்.