பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

ஒகேனக்கல் மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஒகேனக்கல் மலைப்பாதையின் வளைவு ஒன்றில் அரசுப் பேருந்து திரும்பியபோது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியானதாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள், தர்மபுரி மற்றும் பெண்ணாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான பேருந்தில் 64 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேருந்தின் டிரைவர் மற்றும் நடத்துனர் தப்பியோடிவிட்டனர்.