பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2015

டெல்லியில் பிப்ரவரி 7ல் சட்டமன்றத் தேர்தல்!ஸ்ரீரங்கத்தில் பிப்ரவரி 13ம் தேதி இடைத்தேர்தல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றதால்,  அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி  பறிக்கப்பட்டது.  
இதையடுத்து   ஸ்ரீரங்கம்  சட்டமன்ற தொகுதி காலியானது.  

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஜனவரி 19ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.  மனுவை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி  27ம் தேதி.

வேட்புமனு பரிசீலனை ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது.  மனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 30ம் தேதி. 

   பிப்ரவரி 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  பிப்ரவரி 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.  

டெல்லியில் பிப்ரவரி 7ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெறுகிறது.  பிப்ரவரி 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்று இந்தியத்தேர்தல் ஆணையம் அறிவித்தது