பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2015

பஸ் கட்டணம் விரைவில் ஏழு வீதத்தால் குறையும்; ஆரம்பக் கட்டணம் 8 ரூபா

டீசல் விலை குறைவடைந்துள்ளதால் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே தீர்மானமெடுக்க வேண்டுமெனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.


நேற்று வியாழக்கிழமை நுகேகொடையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே கெமுனு விஜேரட்ண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது;


எரிபொருள் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதுடன் ஆரம்பக் சட்டணம் ஒரு ரூபாவால் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.


எவ்வாறாயினும் கட்டணங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ள வேண்டும்.

இதன்படி எதிர்வரும் நாட்களில் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.