பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2015

இரவோடிரவாக காணாமல்போகும் டக்ளஸின் பதாகைகள்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றியீட்டி ஆட்சியமைத்திருக்கும் நிலையில், யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் போட்டிருக்கும் தனது உருவப் படம் பொறித்த பதாகைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரவோடிரவாக அகற்றிக் கொண்டிருப்பதனை காணமுடிகின்றது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று இன்றைய தினம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர் டக்ளஸின் கட்டப்பஞ்சாயத்து அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அவசர அவசரமாக யாழ்.குடாநாட்டிலுள்ள தனது உருவப்படத்துடன் கூடிய பதாகைகளை அவர் அகற்றி வருகின்றார்.
இதேவேளை இன்றைய தினம் இரவு 8 மணியளவில் நல்லூர் பகுதியில் உள்ள பதாகைகளை மகேஸ்வரி நிதியத்திற்குச் சொந்தமான வாகனங்களில் கொண்டு செல்வதையும் காணமுடிந்தது.