பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2015

நாங்கள் நாட்டைவிட்டு செல்ல மாட்டோம்


news
நாட்டில் ஒற்றையாட்சி மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாத்து, அவற்றுக்கு எந்தவொரு தடையும் ஏற்படாதவாறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இந்தநிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம். மேலும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
இந்த நாட்டைவிட்டு வெளியேறிச் செல்லமாட்டோம் எனவும் பசில் ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமலும் ஒன்றுபட தெரிவித்துள்ளனர்.