பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜன., 2015

சபரிமலை செல்வதற்கு சட்டவிரோதமாக தமிழகம் சென்ற யாழ். இளைஞன் கைது


இலங்கையிலிருந்து தனுஸ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக சென்ற  இளைஞரை இந்திய க்யூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்
.

தமிழகம் தனுஸ்கோடி பகுதியில் இலங்கை அகதி ஒருவர் வந்திருப்பதாக க்யூ பிரிவு பொலிசாருக்கு  அப்பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞனை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
                               
இவர் யாழ்ப்பாணத்தை  சேர்ந்த மணிகண்டன் எனவும் தந்தையிடம் படகுக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கிகொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து இரவு 2 மணிக்கு புறப்பட்டு  சபரிமலை செல்வதற்கு வந்துள்ளதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.