பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜன., 2015

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை திறந்த பொலிஸார்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை பொலிஸார் சற்றுமுன்னர் திறந்துள்ளனர்.
குறித்த களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தததாகவும் வாழைத்தோட்ட பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாநாட்டு மண்டப வளாகத்தில் றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான 23 கொள்கலன்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாதுகாப்பு அமைச்சினால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சினால் சீல் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.