பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2015






ன்னும் வெறி அடங்கவில்லை, அந்தப் படுபாதகனுக்கு. ""இந்தியவம்சாவளி மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு ஈழத் தமிழர்கள்தான் என் தோல்விக்குக் காரணம்'' என பழிவாங்கத் தயாராகும் ஒரு காட்டு விலங்கைப் போல, "சிங்கள மக்கள் என் பக்கம்தான்' என மார்தட்டியிருக்கிறார், மகிந்த ராஜபக்சே. 

அரசுத்தலைவருக்கான ’அலறி’ மாளிகையிலிருந்து வெளியேறி, அம்பந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான மெலமுதனவில் போய், இப்படி திருவாய்மலர்ந்து இருக்கிறார், இனப்படுகொலையாளனும் மாபாதகனுமான அந்த மனிதப் பிறவி!

ஆட்சியதிகாரம் எல்லாவற்றையும் மக்கள் ராஜபக்சே குடும்பத்திடமிருந்து பறித்து, இன்னொருவரிடம் கொடுத்துவிட்டார்களே? பெரிய மாற்றம் வந்ததாகச் சொன்னார்களே? ராஜபக்சே குடும்பமே நாட்டைவிட்டு ஓடிப்போய் விட்டது என்றார்களே? எப்படி இப்படி பழைய கோதாவில் பேசமுடிகிறது? என்னதான் நடக்கிறது, இலங்கைத் தீவில்? 

ராஜபக்சே குடும்பமோ அதைச் சுற்றியிருந்த கூட்டமோ நாட்டைவிட்டு ஓடிவிடவில்லை. இனப்படுகொலையை வழிநடத்தி உத்தரவுகளை இட்ட மகிந்தவின் தம்பி கோத்தபாய ராஜபக்சே, கடந்த ஞாயிறுவரை, அரசாங்க வீட்டை காலிசெய்யவில்லை. ரகசியமாக தப்பிவிட்டதாகச் சொல்லப்படும், குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.யும் இலங்கையைவிட்டு தான் வெளியே செல்லவில்லை என அறிக்கைவிட்டிருக்கிறார். 

இதற்கு நேர்மாறாக, ராஜபக்சே கூட்டத்தால் ராணுவத்தை விட்டு நீக்கப்பட்டு, வெளிநாட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் தலைமைத் தளபதி பொன்சேகாவுக்கு நெருக்கமான முன்னாள் தளபதிகள், நாடு திரும்பியிருக்கிறார்கள். மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டி வலன ஆகிய இருவருமே, சனியன்று கொழும்பு வந்தடைந்த அந்த அதிகாரிகள். இவர்களுடன் பொன் சேகாவுக்கு வேண்டப்பட்ட மேலும் சில ராணுவ அதிகாரிகளும் இலங் கைக்குத் திரும்பவுள்ளனர். இவர்களெல்லாம் 2010 அதிபர் தேர்தலில் பொன்சேகா தோற்றதையடுத்து, பதவிப் பறிக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்டதால், வெளி நாடுகளுக்குச் சென்று வசித்துவந்தனர். இப்போது அதிபராகியிருக்கும் மைத்திரிக்கு ஆதரவாக தேர் தல் பணியாற்றிய பொன்சேகா வின் ஆசியால், இவர்களுக்கு மீண்டும் ராணுவப் பதவிகள் அளிக்கப்படும் என்ற தகவலை நடப்பு நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 


இத்துடன், மகிந்த அரசாங்கத்தின் கொலைவெறித் தாக்குதல்கள்,  அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, வெளிநாடுகளுக்குச் சென்ற பத்திரிகையாளர்கள், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் இலங்கைக்குத் திரும்ப புதிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மைத்திரியின் சார்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன, 10ஆம் தேதியன்று கொழும்புவில் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்தார். 

கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் நடந்தேறிய அநியாய, அட்டூழியங்களை நேரில் பார்த்தவர்கள், அனுபவித் தவர்களுக்கு உண்மையில் இது குறிப்பிடத்தக்க மாற்றம்தான். குடிமக்களுக்கான...