பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜன., 2015

முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி மைத்திரிக்கு ஆதரவு


முன்னாள் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி இன்று பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொண்டுள்ளார்.இவர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தபோதும் போதுமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் வாகனம் ஒன்றும் அலுவலகம் ஒன்றும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டின் நல்லாட்சிக்காகவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கருதியும், மலையக அபிவிருத்தி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.