பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2015

இலங்கை அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்பக் கூடாது என்பது பெரும்பாலான தமிழர்களின் எண்ணம்: வாசன்


தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டாயப்படுத்தி, தாய் நாட்டிற்கு அனுப்பக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 13வது அரசியல் சாசன சட்டத்தை நிறைவேற்றி சிங்கள மக்களுக்கு கிடைக்கும் உரிமைகளையும், அங்கீகாரத்தையும் தமிழர்களுக்கும் வழங்க வேண்டும். 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு சென்று உரிய பாதுகாப்புடன் வாழ்வதற்கு இலங்கை அரசு உறுதி அளிப்பதுடன், பூர்வீக பகுதிகளில் கல்வி, வீடு, வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கட்டாயப்படுத்தி, தாய் நாட்டிற்கு அனுப்பக் கூடாது என்பது பெரும்பாலான தமிழர்களின் எண்ணம். 

இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு செல்லும் பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்