பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2015

வவுனியாவில் குழியால் வெளிவந்த ஆயுதங்கள் மீட்பு

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் மலைமுருகன் கோயிலுக்கு அருகில் வீட்டு வளவு ஒன்றினுள் பரல் ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார்  மீட்டுள்ளனர்.

 
 இன்று  தென்னங்கன்று நடுவதற்காக குழிவெட்டியபோது பரல் ஒன்று காணப்பட்டுள்ளது. மேலும் தோண்டியபோது அதற்குள் ஆயுதங்கள் இருந்தமை தெரியவந்தது. 
 
இதனையடுத்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் அந்த பரலில் இருந்த
வெடிபொருள்களை மீட்டனர். 
 
இதில் ஆர்.பி.ஜி.எறிகணைகள் - 2, பரா வெளிச்சக்குண்டுகள் - 2, எம்.பி.எம்.ஜி. ரவைகள் 67 என்பன உட்பட சில வெடிபொருள்கள் மீட்கப்பட்டன. 
 
மேலும் இந்தப் பிரதேசம் முன்னர் காட்டுப் பகுதியாக இருந்து 2010 ஆம் ஆண்டளவிலேயே பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது என்றும் இந்தப் பகுதியில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கருதி அப்பகுதியை புல்டோசர் கொண்டு அகழ்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.