பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2015

யாழில் தொடரும் வாள்வெட்டுக்கள்


 யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. அதில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் சம்பவ இ
டங்களும் கூட அதிகரித்துள்ளன.
 
 
கடந்த 14 நாள்களில் 6 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. என்று யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார்.
 
நேற்று பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 
மேலும் இவ்வாறு தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.யாழில் கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கி கடந்த வருடம்பல இடங்களில் பலர்; வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.சிலர் உயிரிழந்துள்ளனர்.
 
புதுவருடம் தொடங்கி 14 நாள்களுக்குள்ளேயே இத்தனை சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்ச்சியாக இடம்பெறுமா  என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.