பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜன., 2015

புதிய அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களில் தமிழ் கூட்டமைப்பு பங்கேற்காது


புதிதாக அமையவுள்ள மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்று எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாளை அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முக்கிய பொறுப்பு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளதாக புதிய அரசுத் தலைமை அறிவித்துள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
புதிய அமைச்சவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பங்கேற்குமா? எனக் கேட்ட போதே, எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அக்கட்சி பதிலளித்துள்ளது.