பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜன., 2015

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் - விமல் வீரவன்ச


 தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை உண்மையென நிரூபித்தால் தான் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகிக் கொள்வதாக தேசிய சுதந்திர
முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
 
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
தமக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக கூறி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள  குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று. முடியுமானால் இதற்குரிய ஆதராங்களை கொண்டுவரப்படுமாயின் அதற்கு தான் பதிலளிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.